முகப்பு விளையாட்டு
மீராபாய் சானுக்கு பிரதமர் மோடிதான் உதவி செய்தார்: மணிப்பூர் முதல்வர்
By DIN | Published On : 06th August 2021 11:57 AM | Last Updated : 06th August 2021 11:57 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
பிரதமர் மோடி தலையிட்டதால்தான் ஒலிம்பிக் செல்வதற்கு முன்பு மீராபாய் சானு உள்பட இருவருக்கு உதவி கிடைத்தது என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மீராபாய் சானு.
இவர் உள்பட இரண்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு முன்பு, அமெரிக்க சென்று பயிற்சி பெறவும் மருத்துவ வசதி கிடைக்கவும் பிரதமர் மோடி உதவி செய்தார் என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வளர்ச்சி பணிகளுக்கான நிதி உதவிக் கோரி அம்மாநில முதல்வர் பைரன் சிங் தில்லி சென்றுள்ளார். அப்போதுதான், தனக்கு பிரதமர் மோடி உதவியதாக சானு தெரிவித்ததை அவர் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி உள்பட பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்த பின்பு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், "பிரதமர் மோடி தனக்கு உதவியதாக சானு தெரிவித்தது எனக்கு ஆச்சரிமாக இருந்தது.
இதையும் படிக்க | இதயங்களை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி: 4-வது இடம் பிடித்தது
அமெரிக்காவுக்கு சென்று எலும்பில் சிகிச்சை பெறவும் பயிற்சி பெறவும் அவருக்கு உதவி கிடைக்கவில்லையெனில் தன்னுடைய இலக்கை அடைந்திருக்க முடியாது என சானு தெரிவித்தார். பிரதமர் மோடி தனக்கு எப்படி நேரடியாக உதவினார் என்பது குறித்து சானு விவரித்தார். பிரதமர் சானுக்கு உதவியதை எண்ணி மணிப்பூர் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்றார்.