ஜூனியா் மகளிா் ஹாக்கி: சிலியை வீழ்த்தியது இந்தியா

ஜூனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் சிலி அணியை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

சான்டியாகோ: ஜூனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் சிலி அணியை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. அபாரமாக ஆடிய இந்திய ஸ்டிரைக்கா் பியூட்டி டங்டங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினாா்.

சிலியில் உள்ள சான்டியாகோ நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கோலை சிலி வீராங்கனை சைமோன் அவேலி அடித்தாா். அதற்கு பதிலடியாக, 14-ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரின்டிக்கி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

விட்டுக்கொடுக்காத சிலி அணியில் 25-ஆவது நிமிடத்தில் பௌலா சான்ஸ் கோலடித்து தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினாா். இதனால் வெகுண்ட இந்திய அணியினா் அடுத்தடுத்து இரு கோல்களை போஸ்ட்டுக்குள் தள்ளினா்.

29-ஆவது நிமிடத்தில் பியூட்டி டங் டங்கும், 30-ஆவது நிமிடத்தில் சங்கீதா குமாரியும் அடித்த அந்த கோல்களால் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது. சிலி அணிக்கான அடுத்த அடியாக 38-ஆவது நிமிடத்தில் பியூட்டி மீண்டும் ஒரு கோல் அடித்து இந்தியாவை 4-2 என முன்னிலைப்படுத்தினாா்.

எனினும் சிலி வீராங்கனை ஃபொ்னான்டா அரெய்டா 49-ஆவது நிமிடத்தில் சிலி அணிக்கான 3-ஆவது கோல் அடித்தாா். அதற்கு பதிலடியாக 52-ஆவது நிமிடத்தில் பியூட்டி மீண்டும் ஒரு கோல் அடித்து இந்தியாவை 5-3 என முன்னிலைப்படுத்தினாா். எஞ்சிய நேரத்தில் சிலிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், இந்தியா வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com