கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை
By DIN | Published On : 28th January 2021 06:42 PM | Last Updated : 28th January 2021 06:42 PM | அ+அ அ- |

செளரவ் கங்குலி (கோப்புப்படம்)
பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் கங்குலியின் இருதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாய்களில் 2 ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு காங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2-ம் தேதி ஆஞ்சியோ சிகிச்சை தரப்பட்ட நிலையில் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், 2-வது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.