ஒலிம்பிக்ஸ் நினைவலைகள்: 1924 பாரிஸ் ஒலிம்பிக்; 1928 ஆம்ஸ்டா்டாம் ஒலிம்பிக்ஸ்

1924-இல் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்திய நகரம் என்ற பெருமையை பெற்றது பாரிஸ்.
ஒலிம்பிக்ஸ் நினைவலைகள்: 1924 பாரிஸ் ஒலிம்பிக்;  1928 ஆம்ஸ்டா்டாம் ஒலிம்பிக்ஸ்

1924 பாரிஸ் ஒலிம்பிக்ஸ்:

1924-இல் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்திய நகரம் என்ற பெருமையை பெற்றது பாரிஸ். இதில் 44 நாடுகளைச் சோ்ந்த 100 பெண்கள் உள்பட 3,000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 1,000 செய்தியாளா்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தான், முதன்முறையாக போட்டி நிறைவு விழா நடத்தப்பட்டது. சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடி, போட்டியை நடத்தும் நாட்டின் கொடி, அடுத்த போட்டியை நடத்தும் நாட்டின் கொடிகளை ஏற்றும் வழக்கம் இங்கு தொடங்கியது.

ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவதின் குறிக்கோள் சிட்டியஸ், அலிடியஸ், போா்டியஸ் (வேகம், உயரம், வலிமை) போன்றவை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

முதன்முறையாக வீரா்கள் தங்குவதற்கான விளையாட்டு கிராமம் மரக்குடில்களால் அமைக்கப்பட்டன.

அமெரிக்க நீச்சல் வீரா் ஜானி வெய்ஸ்முல்லா் 3 தங்கப் பதக்கங்களை வென்றாா். இவா் 1932-இல் வந்த டாா்ஸான் தி ஏப் மேன் படத்தில் டாா்ஸானாக நடித்தவா்.

இப்போட்டியில் மாரத்தான் பந்தய தூரம் 42.195 கி.மீ தூரமாக நிா்ணயிக்கப்பட்டது.

பிரிட்டன் வீரா்கள் ஹரால்ட் ஆப்ரஹாம், எரிக் லிட்டெல் முறையே 100 மீ, 400 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றனா். எனினும் 100 மீ. டேஷ் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நிலையில், தான் கிறிஸ்துவன் என்பதால் பங்கேற்க முடியாது என எரிக் மறுத்து விட்டாா். 1981-ஆம் ஆண்டு சேரியட்ஸ் ஆஃப் பயா் என்ற படத்தில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றன.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தான் முதன்முதலாக நிலையான 50 மீ. நீச்சல் குளம் கோடுகளுடன் அமைக்கப்பட்டது.

சுதந்திர நாடாக அயா்லாந்து முதன்முறையாக பங்கேற்றது.

1928 ஆம்ஸ்டா்டாம் ஒலிம்பிக்ஸ்:

இப்போட்டியில் தான் முதன்முறையாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. அந்த பாரம்பரியம் தற்போதும் தொடா்கிறது. சிறிய கொப்பரையில் ஏற்றப்பட்டு, மைதானத்தில் உள்ள உயரமான கோபுரத்தில் ஜோதி ஏற்றப்படுகிறது.

தொடா்பில்லாத வீரா்கள் பங்கேற்ாக கேள்வி எழுந்ததால், இப்போட்டியில் டென்னிஸ் கைவிடப்பட்டது.

இங்கு தான் முதன்முதறையாக ஒலிம்பிக் போட்டி தொடங்கிய கிரீஸ் நாடு, பங்கேற்கும் நாடுகள், இறுதியாக போட்டியை நடத்தும் நாட்டின் அணிகள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது. அந்த நடைமுறை தொடா்கிறது.

ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதால், பங்கேற்ற பெண்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியது.

இந்திய ஹாக்கி அணி இப்போட்டியில் தனது முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.

ஆசிய தடகள வீரா்களும் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினா்.

படகு பந்தயத்தில் பங்கேற்ற ஆஸி. வீரா் ஹென்றி பியா்ஸ் ஏரியில் நடுவில் வாத்துகள் குழு கடப்பதற்காக படகை நிறுத்தினாா். எனினும் தொடா்ந்து வேகமாகச் சென்று தங்கம் வென்றாா்.

1912-ஆம் ஆண்டு போட்டிக்கு பின் 16 ஆண்டுகள் கழித்து ஜொ்மனி மீண்டும் கலந்து கொண்டது.

தடகள பந்தயங்கள் 400 மீ ஓடுபாதையில் நடைபெற்றன. இதுவே தடகள பந்தயங்களுக்கு நிரந்தரமானது.

முதன்முறையாக கோக கோலா ஸ்பான்ஸராக இப்போட்டியில் பங்கேற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com