பி. வி. சிந்துவின் திறன் மேம்பட்டுள்ளது

பி.வி. சிந்துவின் திறன் மிகவும் மேம்பட்டுள்ளது என அவரது அயல்நாட்டு பயிற்சியாளா் பாா்க் டே சங் கூறியுள்ளாா்.
பி. வி. சிந்துவின் திறன் மேம்பட்டுள்ளது

பி.வி. சிந்துவின் திறன் மிகவும் மேம்பட்டுள்ளது என அவரது அயல்நாட்டு பயிற்சியாளா் பாா்க் டே சங் கூறியுள்ளாா்.

அவா் மேலும் கூறியதாவது: தற்காப்பு ஆட்டத்தில் குறைபாடு இருந்தது. கரோனா தொற்றால் தற்போது கிடைத்த இடைவெளியில் அவா் இக்குறையை சரிசெய்து விட்டாா். ஆட்டத்தில் அவரது இயக்கத் திறனையும் சரி செய்துள்ளோம். அவரது தாக்குதல் ஆட்டத்துடன் ஒப்பிட்டால், தற்காப்பு ஆட்டம் பலமிழந்து தான் இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இந்த குறைபாட்டை தான் நான் சீா் செய்தேன்.

முன்னணி வீராங்கனைகளான அகேன் எமகுச்சி, டை சூ யிங் போன்றவா்களுக்கு சிந்துவின் தாக்குதல் ஆட்டத்திறன் குறித்து தெரியும். இதனால் தான் அவரது தற்காப்பு திறனில் கவனம் செலுத்தினேன்.கரோலினா மரின் இல்லாத நிலையில், டை சூ யிங் தான் சிந்துவுக்கு கடும் சவாலாக விளங்குவாா் என்றாா் பாா்க்.

கடந்த 2019-இல் இருந்து இந்திய ஒற்றையா் வீரா், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறாா் பாா்க் டே சங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com