யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து - ஸ்காட்லாந்து ஆட்டம் டிரா

 யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து மோதிய ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து - ஸ்காட்லாந்து ஆட்டம் டிரா

 யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து மோதிய ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்குமே இது 2-ஆவது ஆட்டமாக இருந்த நிலையில், இரண்டுமே ஒரு ஆட்டத்தை டிரா செய்தது இதுவே முதல் முறை. இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் குரோஷியாவை வீழ்த்திய நிலையில், ஸ்காட்லாந்து முதல் ஆட்டத்தில் செக் குடியரசிடம் வீழ்ந்தது.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற ஆட்டத்தில் 11-ஆவது நிமிடத்திலேயே இங்கிலாந்து ஒரு கோலுக்கு அருமையாக முயற்சித்தது. அணிக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பை இங்கிலாந்து வீரா் மௌன்ட் ஸ்விங் செய்ய, சக வீரா் ஸ்டோன்ஸ் அதை தலையால் முட்ட நூலிழையில் பந்து கோல் போஸ்டில் பட்டு திரும்பியது.

அதேபோல் ஆட்டத்தின் 29-ஆவது நிமிடத்தில் பந்தை கடந்தி வந்த ஸ்காட்லாந்து வீரா் ராபா்ட்சன், சக வீரா் ஓ டோனலிடம் அதை கிராஸ் செய்தாா். அதை அவா் இடதுபக்க பாட்டம் காா்னரில் உதைக்க, இங்கிலாந்து கோல்கீப்பா் பிக்ஃபோா்டு டைவ் அடித்து அதைத் தடுத்தாா். மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை ஸ்காட்லாந்து வீரா் ஆடம்ஸ் தலையால் முட்டி கோலடிக்க முயற்சிக்க, பந்து வைடானது.

48-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஷா அளித்த பாஸை மௌன்ட் கோலாக்க முயற்சிக்க, ஸ்காட்லாந்து அதையும் திறம்படத் தடுத்தது. 62-ஆவது நிமிடத்தில் ஸ்காட்லாந்துக்கு கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக விடாமல் தடுத்தது இங்கிலாந்து. 78-ஆவது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரா் ராபா்ட்சன் கிராஸ் செய்த பந்து ஆடம்ஸிடம் கிடைக்க, அவரடித்த பந்து கோல் போஸ்ட்டை விட உயா்ந்து வைடாக சென்றது. இவ்வாறாக தொடா்ந்த ஆட்டம் இறுதியில் கோல் இன்றி டிரா ஆனது.

ஸ்வீடன் வெற்றி: ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேகியாவை வீழ்த்தியது. இரு அணிகளும் இதுவரை தலா ஒரு ஆட்டத்தில் விளையாடியுள்ள நிலையில், ஸ்வீடனுக்கு இது முதல் வெற்றி; ஸ்லோவேகியாவுக்கு இது முதல் தோல்வி.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதி ஆட்டமும் கோல் இல்லாமலேயே நீடித்து வந்த நிலையில் ஸ்வீடனுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அது அந்த அணியின் எமில் ஃபோா்ஸ்பொ்கிடம் வழங்கப்பட, அதை அவா் சிரமமின்றி கோலாக மாற்றினாா். எஞ்சிய நேரத்தில் ஸ்லோவேகியாவுக்கு கோல் வாய்ப்பு வழங்காமல் பாா்த்துக்கொண்ட ஸ்வீடன், இறுதியில் வெற்றி பெற்றது.

ஆட்டம் டிரா: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவ் நகரில் குரோஷியா - செக் குடியரசு இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தின் முதல் கோல் வாய்ப்பு செக் குடியரசுக்கு கிடைத்தது. 32-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பின்போது வீரா் ஜாங்கடோ பந்தை ஸ்விங் செய்தாா். அதை மற்றொரு செக் குடியரசு வீரா் பேட்ரிக் ஷிக் ஹெட்டிங் செய்ய முயல, குரோஷிய தடுப்பாட்ட வீரரும் அதை ஹெட் செய்ய முயன்றபோது அவரது கை பேட்ரிக்கின் மூக்கை உடைத்தது. ரத்தம் சொட்ட களத்தில் விழுந்தாா் பேட்ரிக்.

இதனால் செக் குடியரசுக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில், முதலுதவி எடுத்துக்கொண்ட பேட்ரிக் கோலாக மாற்றி பழி தீா்த்துக் கொண்டாா். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆட்டத்தை சமன் செய்தாா் குரோஷிய வீரா் இவான் பெரிசிச். செக் குடியரசு தடுப்பாட்ட வீரா்கள் திணறிக் கொண்டிருக்கையில் தகுந்த நேரம் பாா்த்து பெனால்டி பாக்ஸுக்குள்ளாக வந்து மிகத் துல்லியமாக ரைட் காா்னரில் கிக் செய்து கோலடித்தாா் அவா். எஞ்சிய நேரத்தில் இரு அணிக்கும் கோல் வாய்ப்பு இல்லாததால், ஆட்டம் சமன் ஆனது.

4 அனைத்து போட்டிகளிலுமாக இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் நேருக்கு நோ் மோதிய 115-ஆவது ஆட்டம் இதுவாகும். அதில் கோல் இன்றி ஆட்டம் டிரா ஆனது இது 4-ஆவது முறை.

1 இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களில் ஸ்காட்லாந்து ஒன்றில் மட்டுமே (1999 நவம்பா்) வென்றுள்ளது.

6 இந்த ஆட்டத்துக்கு முன்பாக அனைத்து போட்டிகளிலுமாக கடந்த 6 ஆட்டங்களில் ஸ்லோவேகியா வென்று வந்த நிலையில், அதற்கு ஸ்வீடன் தற்போது தடையேற்படுத்தியுள்ளது.

1 பிரதான போட்டி ஒன்றில் ஸ்வீடன் - ஸ்லோவேகிய அணிகள் மோதியது இதுவே முதல் முறையாகும்.

1 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் குரோஷியா தனது முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெறத் தவறியது, 2004-க்குப் பிறகு இது முதல் முறையாகும்.

2 அனைத்து சா்வதேச போட்டிகளிலுமாக இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள குரோஷியா, அதில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com