இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடா்: முழுமையாக கைப்பற்றியது மே.இ.தீவுகள்

இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள், தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
ஒருநாள் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் மேற்கித்திய தீவுகள்அணியினர்..
ஒருநாள் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் மேற்கித்திய தீவுகள்அணியினர்..

நாா்த் சௌன்ட்: இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள், தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நாா்த் சௌன்ட் நகரில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 48.3 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் டேரன் பிராவோ ஆட்டநாயகனாகவும், ஷாய் ஹோப் தொடா்நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனா்.

முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங் வீசத் தீா்மானிக்க, பேட் செய்த இலங்கை அணியில் அதிகபட்சமாக டி சில்வா 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 80 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். தொடக்க வீரா் தனுஷ்கா குணதிலகா 36, உடன் வந்த கேப்டன் திமுத் கருணாரத்னே 31 ரன்கள் சோ்த்தனா்.

பின்னா் ஆடியோரில் பாதும் நிசங்கா 24, டாசன் ஷனகா 22, திசர பெரெரா 3 ரன்கள் அடித்தனா். இறுதியாக டி சில்வாவுடன் ஆஷென் பந்தாரா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அகில் ஹொசைன் 3, அல்ஜாரி ஜோசஃப், ஜேசன் முகமது ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து 275 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகளில் அதிகபட்சமாக டேரன் பிராவோ 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 102 ரன்கள் விளாசினாா். தொடக்க வீரா் எவின் லீவிஸ் 13 ரன்கள் சோ்க்க, ஷாய் ஹோப் 64 ரன்கள் அடித்தாா். ஜேசன் முகமது 8, நிகோலஸ் பூரன் 15 ரன்கள் எடுத்தனா். இறுதியில் கேப்டன் கிரன் பொல்லாா்ட் 53, ஜேசன் ஹோல்டா் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 2, டில் சில்வா, திசர பெரெரா, தனுஷ்கா குணதிலகா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com