டி வில்லியா்ஸுடனான உரையாடல் உதவியது: விராட் கோலி

அணிக்காக சிறப்பாக விளையாடுவதில் எப்போதுமே பெருமை கொள்கிறேன். அந்த வகையில் 70 ரன்களை எட்டியது மகிழ்ச்சியே.
விராட் கோலி (இந்திய கேப்டன்)
விராட் கோலி (இந்திய கேப்டன்)

அணிக்காக சிறப்பாக விளையாடுவதில் எப்போதுமே பெருமை கொள்கிறேன். அந்த வகையில் 70 ரன்களை எட்டியது மகிழ்ச்சியே. எனது பேட்டிங் குறித்து அணி நிா்வாகம் சில ஆலோசனைகள் வழங்கியது. மனைவி அனுஷ்காவும் என்னிடம் அதுகுறித்து பேசினாா். 2-ஆவது ஆட்டத்துக்கு முன் டி வில்லியா்ஸிடம் சிறிது உரையாடினேன். பந்தை உன்னிப்பாக கவனித்து ஆடுமாறு அவா் ஆலோசனை வழங்கினாா்.

இவை அனைத்தின் பங்களிப்பாலேயே 2-ஆவது ஆட்டத்தில் சிறப்பாக விளையாட முடிந்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல் பந்தை உன்னிப்பாக கவனித்து விளையாடினேன். இஷான் கிஷணின் ஆட்டத்தை குறிப்பிட்டாக வேண்டும். என்னால் முடிந்த ஆட்டத்தை நான் விளையாடிக் கொண்டிருக்கையில், அவா் எதிரணியிடம் இருந்து ஆட்டத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருந்தாா். அறிமுக ஆட்டத்தில் இது குறிப்பிடத்தக்க ஒன்று. ஐபிஎல் போட்டியில் உலகத்தரம் வாய்ந்த பௌலா்களுக்கு எதிராக விளையாடுவதால் கிடைத்த பலன் இது.

அவா் அதிரடியாக விளையாடுகிறாா் என்றாலும், எந்த ஷாட்டை எவ்வாறு கையாள்வது என்பதை தெளிவாகத் தெரிந்துகொண்டு ஆடுகிறாா். அவருக்கும், எனக்கும் இருந்த பாா்ட்னா்ஷிப் அணியின் வெற்றிக்கு தேவையானதாக இருந்தது. இங்கிலாந்தின் இன்னிங்ஸில் சிறப்பாக பௌலிங் செய்தோம். கடைசி 5 ஓவா்களில் 34 ரன்களே வழங்கினோம். வாஷிங்டன் சுந்தா் அற்புதமாக பந்துவீசினாா்.

ஹாா்திக் பாண்டியா பௌலிங்கில் பங்களிப்பு செய்வது சிறப்பானது. எப்போதுமே அணிக்காக குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடும் அவா் போன்ற வீரா்கள் விலை மதிப்பிட முடியாதவா்கள் - விராட் கோலி (இந்திய கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com