புத்திசாலித்தனமாக செயல்பட்ட விக்கெட் கீப்பர்; ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

அஸ்வின் வீசிய பந்து, சிறப்பாக ஆடி வந்த வில் யங்கின் பேட்டை ஓராசி சென்றது. ஆனால், நடுவர் விக்கெட் தர மறுத்துவிட்டார். பின்னர், டிஆர்எஸ் எடுக்கும்படி கேப்டன் ரஹானேவை பரத் கேட்டு கொண்டார்.
தடுமாறும் இந்தியா
தடுமாறும் இந்தியா

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இதையடுத்து, இன்று தொடங்கிய மூன்று நாளிலும் நியூசிலாந்து அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. இருப்பினும், சாஹாவுக்கு பதில் சப்ஸ்டிடியூட் ஆக கீப்பிங் செய்த பரத், புத்திசாலித்தனமாக செயல்பட்டு இந்தியா முதல் விக்கெட் எடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.

அஸ்வின் வீசிய பந்து, சிறப்பாக ஆடி வந்த வில் யங்கின் பேட்டை ஓராசி சென்றது. ஆனால், நடுவர் விக்கெட் தர மறுத்துவிட்டார். பின்னர், டிஆர்எஸ் எடுக்கும்படி கேப்டன் ரஹானேவை பரத் கேட்டு கொண்டார். இதையடுத்து. டிஆர்எஸ் முடிவில் பேட்டில் பந்து ஓராசி சென்றது உறுதியானது. இதன் பின்னர், தனது முடிவை நடுவர் மாற்றிக் கொண்டார். 

ஒரு வழியாக, 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது. பின்னர், பொறுமையாக ஆடி வந்த கேன் வில்லியம்சனின் விக்கெட்டை எல்பிடபிள்யூ மூலம் வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கைப்பற்றினார். உணவு இடைவேளை வரை, இரண்டு விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 197 ரன்கள் எடுத்துள்ளது.

டாம் லாதம் 239 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆடிவருகிறார். வில் யங் 89 ரன்களுக்கும் கேப்டன் வில்லியம்சன் 18 ரன்களுக்கும் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

முன்னதாக, வியாழக்கிழமை தொடங்கிய போட்டியில், ஷிரேயஸ் ஐயா் - ரவீந்திரா ஜடேஜா ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 258-4 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஷிரேயஸ் ஐயா் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடா்ந்தனா்.

நியூஸி. பௌலா் டிம் சௌதியின் அபார பந்தில் போல்டாகி 50 ரன்களுடன் வெளியேறினார் ஜடேஜா. ஷிரேயஸ் - ஜடேஜா இருவரும் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்களை சோ்த்தனா். அவருக்கு பின் ஆட வந்த ரித்திமான் சாஹா 1 ரன் எடுத்த நிலையில் சௌதி பந்தில் உடனே பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடா்ந்து 105 ரன்களுடன் மெய்டன் சதம் அடித்த ஷிரேயஸ் ஐயரும் சௌதி பந்துவீச்சில் வில் யங்கிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 171 பந்துகளில் 2 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் சதமடித்தார் ஐயா். அக்ஸா் படேல் 3, இஷாந்த் 0 என சொற்ப ரன்களுடன் வெளியேற, ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே கடைசி கட்டத்தில் நிலைத்து ஆடி 56 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 38 ரன்களை எடுத்து அவுட்டானார். உமேஷ் யாதவ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 111.1 ஓவா்களில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com