பயிற்சியாளராக மாறுகிறேனா? எதிர்காலம் குறித்து மனம் திறக்கும் ஹர்பஜன் சிங்

ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக மாற உடன்பாடு உண்டு என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், தனது எதிர்காலம் குறித்து மனம் திறந்துள்ளார். தற்போது, ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவர், பயிற்சியாளராக மாறுவது குறித்து பேசியுள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் நடுவே வர்ணனையாளர்களிடம் பேசிய அவர், "நான் மேலும் விளையாடப் போகிறேனா என்று தெரியவில்லை. ஆனால் கொல்கத்தா அணியில் கிடைக்கும் அனுபவங்களை ரசித்துவருகிறேன்" என்றார்.

அப்போது, எதிர்காலத்தில் பயிற்சியாளராகவோ ஆலோசகராகவோ பணியாற்றுவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, "வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றாம் ஆமாம். கிரிக்கெட் எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது.

என்னால் முடிந்தவரை இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அது பயிற்சியாளராக இருந்தாலும் அல்லது வழிகாட்டியாக இருந்தாலும், தேவையானதைச் செய்து அணிக்கு உதவுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என பதிலளித்தார்.

வியாழக்கிழமையன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா, 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது. தற்போது, கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

முக்கியமான போட்டிகள் வரவுள்ளதால், அனுபவசாலியாக இருந்தாலும், அவர் அணியில் விளையாடுவது சந்தேகமே. இந்த சீசனில், கொலகத்தா அணிக்காக ஹர்பஜன் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். விளையாடிய எந்த போட்டிகளிலுமே விக்கெட் எடுக்காததால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

இதுவரை, மொத்தம் 163 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன், சராசரியாக 26.86 ரன்களை விட்டு கொடுத்து 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com