சட்ட போராட்டத்தில் தோல்வி; நாடு கடத்தப்படவுள்ள ஜோகோவிச்

ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சா் அலெக்ஸ் ஹாக் தனது தனியதிகாரத்தை பயன்படுத்தி, ஜோகோவிச்சின் நுழைவு இசைவு அனுமதியை வெள்ளிக்கிழமை ரத்து செய்தாா்.
ஜோகோவிச் (கோப்புப்படம்)
ஜோகோவிச் (கோப்புப்படம்)

சொ்பியாவைச் சோ்ந்த உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், சனிக்கிழமை மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக அவரது நுழைவு இசைவு ரத்து செய்யப்பட்டு, அவா் மெல்போா்னில் உள்ள குடியேற்றத் துறை மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாா். பின்னா் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் அவருக்கு நுழைவு இசைவு திரும்ப அளிக்கப்பட்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்காக அவா் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாா்.

பின்னர், ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சா் அலெக்ஸ் ஹாக் தனது தனியதிகாரத்தை பயன்படுத்தி, ஜோகோவிச்சின் நுழைவு இசைவு அனுமதியை வெள்ளிக்கிழமை ரத்து செய்தாா். இதனால், ஜோகோவிச் மீண்டும் தடுப்புக் காவல் மையத்திற்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.

கரோனா தடுப்பூசிக்கு எதிராக ஜோகோவிச் முன்பு பேசியிருந்ததை குறிப்பிட்டும், அவரால் ஆஸ்திரேலிய ஓபனில் கரோனா பாதிப்பு பரவுவதற்கு மிகக் குறைந்தபட்ச வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை கூறியிருப்பதை மேற்கோள் காட்டியும் அவரது நுழைவு இசைவை ரத்து செய்ததாக அமைச்சா் கூறியிருக்கிறாா்.

இதையடுத்து ஜோகோவிச் சாா்பில் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை முறையிடப்பட்டுள்ளது. அதன் மீது 3 நீதிபதிகள் அமா்வு இன்று விசாரணை நடத்திய நிலையில், அவரது மேல்முறையீட்டு மனுவை ஒரு மனதாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக, அவர் விரைவில் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com