முன்னாள் நியூசிலாந்து கேப்டன் காலமானர்

முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் பேரி சின்கிளையர் தன்னுடைய 85 வயதில் காலமானார். 
படம்: டிவிட்டர், நியூசிலாந்து டிவிட்ஸ் | சின்கிளையர்
படம்: டிவிட்டர், நியூசிலாந்து டிவிட்ஸ் | சின்கிளையர்

முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் பேரி சின்கிளையர் தன்னுடைய 85 வயதில் காலமானார். 

சின்கிளையர் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1963 முதல் 1968 வரை விளையாடினார். மிகவும் ஸ்டைலான கிரிக்கெட் வீரர் என வர்ணிக்கப்படுவர். 1148 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்டில் 1000 ரன்களை எடுத்த முதல் 3வது வீரர் எனபது குறிப்பிடத்தக்கது. 

118 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி 6114 ரன்களை எடுத்துள்ளார். கிளப் போட்டிகளில் 6000 ரன்களை எடுத்துள்ளார்.

இவர் எப்போதுமே என்னுடைய அணியில் நம்பர் 3 வீரராக விளையாடும் நபரென ஜான் ரெய்ட் தனது ‘எ மில்லியன் மைல்ஸ் ஆஃப் கிரிக்கெட்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். 

2016ஆம் ஆண்டு ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு நியூசிலாந்தின் ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற குழுவில் ஒரு நபராக அங்கீகரிக்கப்பட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com