10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. 
ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பும்ரா அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை எடுத்தார்.இதனால்  110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது. 

இதனைத்தொடர்ந்து 111 ரன்கள் என்ற இலக்குடன் கலமிறங்கிய இந்திய அணி, 18.4 ஓவரில் 114 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 58 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஷிகர் தவான் 54 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்தார். இருவரும் விக்கெட் இழக்காமல் 114 ரன்களுடன் ஆட்டத்தை முடித்தனர். 

6 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com