மே.இ.தீவுகள் அணி முன்னாள் கேப்டன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
By DIN | Published On : 18th July 2022 06:09 PM | Last Updated : 18th July 2022 06:09 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ராம்டின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார்.
ராம்டின் 74 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 71 டி20 போட்டிகளில் மே.இ.தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளார். ஜேசன் ஹோல்டர் 2015இல் இவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை பெற்றார். அதுவரை மே.இ.தீவுகள் அணியை இவரே வழிநடத்தினார்.
தனது இன்ஸ்டாகிரம் பதிவில் ராம்டின் கூறியதாவது:
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 14 வருடமாக எனது கனவு நிறைவேறியது. டிரினிடாட், டொபொகோ மற்றும் மே.இ,தீவுகள் அணிக்காக விளையாட வேண்டுமென்ற எனது சிறுவயது ஆசைகள் நிறைவேறியது. கிரிக்கெட் வாழக்கையின் மூலம் இந்த உலகத்தைப் பார்க்க முடிந்தது. பல்வேறு கலாச்சாரத்தை சார்ந்த பல்வேறு நண்பர்கள் கிடைக்க உதவியது.
நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும், உலகெங்கிங்கிலும் உள்ள கிளப் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். 14 வருடன் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.