அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் : கங்குலி புகழாரம்
By DIN | Published On : 05th June 2022 06:42 PM | Last Updated : 05th June 2022 06:46 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று (ஜூன் 5) சதம் விளாசி இங்கிலாந்து அணியினை வெற்றி பெறச் செய்த ஜோ ரூட்டுக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
வலது கை பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் தனது அபார பேட்டிங் திறமையால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்டின் 4வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.
இதையும் படிக்க: ஜோ ரூட் சதம்: லார்ட்ஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இந்த சாதனையைப் படைத்த சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் சௌரங் கங்குலி, ஜோ ரூட் எல்லா நேரங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
Joe Roooooooot ..what a player what a knock under pressure ..an all time great ..@bcci @icc
— Sourav Ganguly (@SGanguly99) June 5, 2022
இது குறித்து டிவிட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ஜோ ரூட்...என்ன ஒரு சிறந்த வீரர், கடினமான சூழலில் சிறப்பான ஆட்டம், எல்லா நேரங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்” எனப் பதிவிட்டுள்ளார்.