சச்சினை தெரிந்தே காயப்படுத்த நினைத்தேன்: சோயிப் அக்தர்

கடந்த 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சினைக் காயப்படுத்த நினைத்தேன் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்  சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கடந்த 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சினைக் காயப்படுத்த நினைத்தேன் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்  சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு மிகச் சிறந்த வீரர். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சினை அவர் எதிர் கொண்டுள்ளார். ஆனால், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் பந்துவீச்சுக்கு எதிராக அவர் சிறப்பாக பேட் செய்தது இன்றளவும் அனைவராலும் பேசப்படுகிறது. பல்வேறு தருணங்களில் சச்சின் டெண்டுல்கர் அக்தரின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டுள்ளார். சச்சினுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பவுன்சர்களை அக்தர் வீசுவது வழக்கம். சமீபத்தில் பேட்டி ஒன்றில், சச்சினை காயப்படுத்த வேண்டுமென்றே  கடந்த 2006ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்து வீசியதாக அக்தர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “முதலில் என்னை இதனை கூற விடுங்கள். நான் கடந்த 2006ஆம் ஆண்டு கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சினை வேண்டுமென்ற காயப்படுத்த நினைத்தேன். அந்தப் போட்டி முழுவதும் சச்சினை எப்படியாவது காயப்படுத்திவிட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது. பாகிஸ்தானின் கேப்டன் இன்சமாம் என்னை முன்பகுதியில் பந்து வீசுமாறு கூறினார்.ஆனால், நான் சச்சினின் தலைக்கவசத்தையே குறிவைத்து பந்து வீசினேன். இருப்பினும், சச்சின் நான் வீசிய பந்துகளை தலைக்கவசத்தில் பட விடாமல் திறம்பட விளையாடினார்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com