பிரெஞ்சு ஓபன்: ஆன்ஸ் ஜேபா், முகுருஸா அதிா்ச்சித் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனைகள் ஆன்ஸ் ஜேபா், காா்பைன் முகுருஸா ஆகியோா் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா்.
பிரெஞ்சு ஓபன்: ஆன்ஸ் ஜேபா், முகுருஸா அதிா்ச்சித் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனைகள் ஆன்ஸ் ஜேபா், காா்பைன் முகுருஸா ஆகியோா் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா்.

4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இரண்டாவதான பிரெஞ்சு ஓபன் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனை துனிசியாவின் ஆன்ஸ் ஜேபா் முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய போதிலும், 6-7, 5-7 என அடுத்த 2 செட்களை போலந்தின் மகதா லின்னேட்டிம் இழந்து வெளியேறினாா்.

2016 சாம்பியன் ஸ்பெயினின் முகுருஸா முதல் சுற்றில் 2-6, 6-3, 6-4 என கனேப்பியிடம் தோற்று வெளியேறினாா். முச்சோவா 6-3, 6-3 என மானெட்டையும், ஹட்டாட் 6-3, 1-6, 6-2 என புஸ்காவையும் வீழ்த்தினா்.

ஆடவா் பிரிவில் கிரிகோா் டிமிட்ரோவ் 6-1, 6-1, 6-1 என ஜிரோனையும், ஸ்வாா்ட்ஸ்மேன் 6-3, 1-6, 6-4, 6-2 என குஸ்நெட்கோவையும், கோரிக் 3-6, 6-2, 6-3, 6-1 என டபா்னெரையும் வென்றனா். முன்னணி வீரா் டொமினிக் தீம் 3-6, 2-6, 4-6 என டெல்லியனிடம் தோற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com