ஐபிஎல் 2022: அதிக சிக்ஸர்களை வாரி வழங்கிய முகமது சிராஜ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு பருவத்தில் அதிக சிக்ஸர்கள் வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையப் படைத்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு பருவத்தில் அதிக சிக்ஸர்கள் வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையப் படைத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) குவாலிஃபையர் 2-வது சுற்றில் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது முகமது சிராஜ் 3 சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்தார். 2 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 

இந்த ஐபிஎல் 2022 பருவம் முழுமைக்கும் முகமது சிராஜின் பந்துவீச்சில்  மொத்தமாக 31 சிக்ஸர்கள் சென்றுள்ளன. இது ஐபிஎல் போட்டிகளில் தனி ஒரு வீரரால் அடிக்க விடப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ ஒரு பருவத்தில் அடிக்கவிட்ட 29 சிக்ஸர்களே அதிகபட்சமாக இருந்தது. 

அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மற்றொரு வீரரான வனிந்து ஹசரங்கா சிராஜிக்கு அடுத்தபடியாக இந்த பருவத்தில் 30 சிக்ஸர்களை வாரி வழங்கியுள்ளார். இருப்பினும், அவரது பந்து வீச்சு இந்த பருவம் முழுவதும் அபாரமாக இருந்துள்ளது. தற்போது இந்த நடப்பு ஐபிஎல் பருவத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் இந்த பருவத்தில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியால் ரூ.7 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட முகமது சிராஜின் பங்களிப்பு அணிக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 514 ரன்களை விட்டுக் கொடுத்து வெறும் 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

குவாலிஃபையர் 2-ல் பெங்களுருவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் நாளை (மே 29) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com