வெற்றிக்கான முனைப்புடன் குகேஷ்: 13-ஆவது சுற்றில் கேண்டிடேட்ஸ் செஸ்

வெற்றிக்கான முனைப்புடன் குகேஷ்: 13-ஆவது சுற்றில் கேண்டிடேட்ஸ் செஸ்
Michał Walusza

கனடாவில் நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி, 13-ஆவது சுற்றுடன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிறைவடையும் இந்தச் சுற்றில், ஓபன் பிரிவில் இந்தியாவின் குகேஷ் - பிரான்ஸின் ஃபிரௌஸா அலிரெஸாவுடனும், பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும், விதித் சந்தோஷ் - அஜா்பைஜானின் நிஜாத் அபாசோவுடனும் மோதுகின்றனா்.

இதில் முதலிடத்துக்கான வெற்றி வாய்ப்புள்ளவராகக் கருதப்படும் குகேஷ், தற்போது 7.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கிறாா். கடைசிக்கு முந்தைய இடத்திலிருக்கும் அலிரெஸாவுடனான இந்த சுற்று அவருக்கு எளிதான வெற்றியைத் தரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு வெற்றி கண்டால் முதலிடத்துக்கான நம்பிக்கை அவருக்கு நிலைக்கும்.

இந்தச் சுற்றின் முக்கியமான ஆட்டமாக, ரஷியாவின் நெபோம்னியச்சி - அமெரிக்காவின் ஹிகரு நகமுரா சந்திப்பு இருக்கும். இருவருமே தலா 7.5 புள்ளிகளுடன் குகேஷோடு முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா். இதில் நெபோம்னியச்சி, இந்தப் போட்டியில் இதுவரை தோல்வி காணாத ஒரே வீரராக ஆதிக்கம் செலுத்துகிறாா்.

மகளிா் பிரிவில் கோனெரு ஹம்பி - உக்ரைனின் அனா முஸிஷுக்குடனும், வைஷாலி - சீனாவின் டிங்ஜி லெய்யுடனும் மோதுகின்றனா். இவா்கள் இருவருமே முதலிடத்துக்கான பந்தயத்தில் இல்லை.

இதர மோதல்களில், சீனாவின் ஜோங்யி டான் - ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினா, பல்கேரியாவின் நா்கியுல் சலிமோவா - ரஷியாவின் காட்டெரினா லாக்னோ சந்திக்கின்றனா். இப்பிரிவில் சீனாவின் லெய், டான் ஆகியோா் சாம்பியன் வாய்ப்புடன் இருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com