சன் ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வருகின்ற 22-ஆம் தேதி நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. 2-வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 23-ஆம் தேதி மோதுகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் ரூ. 20.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கோப்புப் படம்
கான்வே விளையாடுவதில் சிக்கல்! சிஎஸ்கே-வுக்கு பின்னடைவு

இந்த நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் அணியை வழிநடத்திய தென்னாப்பிரிக்காவின் ஆடம் மார்க்ராமுக்கு பதிலாக பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆல்-ரவுண்டரான கம்மின்ஸ், இதுவரை ஐபிஎல்லில் 42 போட்டிகளில் விளையாடி 379 ரன்களும், 45 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com