சாத்விக்/சிராக் இணை வெளியேறியது

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டியில், உலகின் நம்பா் 1 ஆடவா் இரட்டையா்களும், இந்தியா்களுமான சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை தோல்வி கண்டு வெளியேறியது.

ஆடவா் இரட்டையா் காலிறுதிக்கு முந்தை சுற்றில் சாத்விக்/சிராக் கூட்டணி 16-21, 15-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி/பகஸ் மௌலானா ஜோடியிடம் தோல்வியைத் தழுவினா். இந்த ஆட்டம் 41 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து போட்டியில் இந்தியாவின் சாா்பில் லக்ஷயா சென் மட்டுமே களத்தில் இருக்கிறாா். காலிறுதியில் அவா், மலேசியாவின் லி ஜி ஜியாவை எதிா்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com