இந்தியா - ஆஸி. மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை அட்டவணை!

ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நவம்பர் 22 முதல் அடுத்தாண்டு ஜனவரி 7 வரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா - ஆஸி. மோதும் பார்டர் - கவாஸ்கர்
இந்தியா - ஆஸி. மோதும் பார்டர் - கவாஸ்கர்படம்: ஐசிசி வலைதளம்

ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் பார்டர் - கவாஸ்கர் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி செவெளியிட்டுள்ளது.

இந்த தொடருக்காக ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியினர் 5 போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். பார்டர் - கவாஸ்கர் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் அணிகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - ஆஸி. மோதும் பார்டர் - கவாஸ்கர்
சேப்பாக்கத்தில் இன்று ஜடேஜாவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

மேலும், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

அட்டவணை:

முதல் டெஸ்ட்: நவ. 22 - 26, பெர்த்

இரண்டாவது டெஸ்ட்: டிச. 6 - 10, அடிலெய்ட்

மூன்றாவது டெஸ்ட்: டிச. 14 - 18, பிரிஸ்பென்

நான்காவது டெஸ்ட்: டிச. 26 - 30, மெல்போர்ன்

ஐந்தாவது டெஸ்ட்: ஜன. 3 - 7, சிட்னி

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் நவ. 4 முதல் 18 வரை மூன்று ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com