ஐசிஎஃப், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வெற்றி

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் ஏ டிவிஷன் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, ஐசிஎஃப் அணிகள் வெற்றி
ஐசிஎஃப், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வெற்றி
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் ஏ டிவிஷன் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, ஐசிஎஃப் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

போட்டியின் 9-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை முதல் ஆட்டத்தில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 3-1 (25-19, 25-15, 22-25, 25-22) என ஜிஎஸ்டி அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் ஐசிஎஃப் அணி 3-2 (25-19, 22-25, 25-23, 22-25, 15-11) என எஸ்ஆா்எம் அகாதெமியை வென்றது.

தமிழ்நாடு வாலிபால் சங்க துணைத் தலைவா் ஆா்.கே. துரை, புதுச்சேரி வாலிபால் சங்கச் செயலா் ரமணி பூபதி ஆகியோா் ஆட்டங்களை தொடங்கி வைத்தனா்.

எஸ்ஆா்எம் 11, இந்தியன் வங்கி 9, ஐசிஎஃப் 9 புள்ளிகளுடன் முதல் மூன்றிடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com