ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. 
ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. 

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியாவும் ஜப்பானும் மோதியது. 

போட்டி தொடங்கிய 10-ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அந்த அணி இறுதிப் போட்டியின் முதல் கோலை அடித்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி சார்பில் 23-ஆவது நிமிடத்தில் பதில் கோல் போடப்பட்டது. இதன்மூலம், முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்தது. 

2-ஆவது பாதி ஆட்டத்தில் 45-ஆவது நிமிடத்தின் போது ஜப்பான் அணிக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டி வாய்ப்பையும் அந்த அணி கோலாக மாற்றியது. இதன்மூலம், ஜப்பான் அணி மீண்டும் முன்னிலை வகித்தது. 

இதையடுத்து, இந்திய வீராங்கனைகள் நெருக்கடியுடன் விளையாடினர். இருப்பினும், இந்திய வீராங்கனைகளால் அதன்பிறகு கோல் அடிக்க முடியவில்லை. 

இதன்மூலம், ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com