ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு இன்று 2 வெள்ளி, 4 வெண்கலம் 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 13-ஆவது நாளான வெள்ளிக்கிழமை இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றது. 
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு இன்று 2 வெள்ளி, 4 வெண்கலம் 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 13-ஆவது நாளான வெள்ளிக்கிழமை இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றது. 

பாய்மரப்படகு பந்தயம்:

  • பாய்மரப்படகு பந்தயத்தில் 49 எஃப்எக்ஸ் மகளிர் போட்டியில் வர்ஷா கௌதம் - ஸ்வேதா ஷெர்வேகர் இணை 15 பந்தயங்களில் மொத்தம் 40 மதிப்பெண்கள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். 
  • மகளிர் ஓபன் லேசர் 4.7 பிரிவு போட்டியில் 12-ஆம் பந்தயத்துக்கு பிறகு ஹர்ஷிதா டோமர் 62 மதிப்பெண்கள் பெற்றார். இதன்மூலம், அவர் வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.  
  • ஆடவர் 49 பிரிவு பந்தயத்தில் இந்திய இணை வருண் அசோக் - செங்கப்பா கணபதி 15-ஆம் பந்தயத்துக்கு பின் 53 மதிப்பெண்கள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றனர். 

ஸ்குவாஷ் ஆடவர் அணிக்கு வெண்கலம்:

ஸ்குவாஷ் ஆடவர் அணி தனது அரையிறுதியில் 0-2 என்ற கணக்கில் ஹாங் காங்கிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம், வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது. 

விகாஸ் கிருஷ்ணன்:

குத்துச்சண்டை ஆடவர் மிடில் வெயிட் 75 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் அரையிறுதிக்கு முன்னேறினார். இருப்பினும், அவருக்கு கண்ணில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம், அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். 

மகளிர் ஹாக்கியில் வெள்ளி: 

மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி ஜப்பானிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை 49 கிலோ எடை பிரிவு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி:

அரையிறுதிப் போட்டியில் மலேசியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com