ஆசியப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணியை ஹாங்காங் அணி வீழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுகன்யா, தன்வி கன்னா ஆகியோர் அடங்கிய மகளிர் அணி, இறுதிச்சுற்றில் ஹாங்காங் அணியிடம் 2-0 எனத் தோல்வியடைந்தது. சுனன்யாவும் ஜோஸ்னாவும் தோல்வியைச் சந்தித்தார்கள். இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்த ஆசியப் போட்டியில் இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கலம் என 68 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.