ஆசியப் போட்டி: ஒலிம்பிக் சாம்பியனைத் தோற்கடித்து தங்கம் வென்றார் இந்தியாவின் அமித் பங்கால்!
By எழில் | Published On : 01st September 2018 12:52 PM | Last Updated : 01st September 2018 12:52 PM | அ+அ அ- |

ஜகார்த்தா ஆசியப் போட்டியின் குத்துச் சண்டை ஆடவர் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆடவர் லைட் பிளை 49 கிலோ பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஹஸன்பாய் டுஸ்மடோவை எதிர்கொண்டார் இந்தியாவின் அமித் பங்கால். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் அமித் பங்கால் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இந்த ஆசியப் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள 14-வது தங்கப் பதக்கம் இது. 14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.