ஆசியப் போட்டி: 15-வது தங்கப் பதக்கம் வென்று இந்திய அணி சாதனை!
By எழில் | Published on : 01st September 2018 02:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஆசியப் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
இந்திய ஆடவர் அணி பிரிவில் பிரனாப் பர்தன், ஷிப்நாத் சர்கார் ஆகிய இருவரும் தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள். இதன்மூலம் இந்திய அணி சாதனை நிகழ்த்த இருவரும் உதவியுள்ளார்கள்.
ஆசியப் போட்டியின் ஆரம்பத்தில் 1951-ல் இந்திய அணி அதிகபட்சமாக 15 தங்கப் பதக்கங்கள் வென்றது. அந்தச் சாதனையை இந்தியா தற்போது சமன் செய்துள்ளது.
இந்த ஆசியப் போட்டியில் இந்திய அணி 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.