ஆசியப் போட்டி ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா

வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்திய ஹாக்கி அணி...
ஆசியப் போட்டி ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா

வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்திய ஹாக்கி அணி.

உலகின் 5-ஆம் நிலையில் உள்ள இந்திய அணி, மீண்டும் தங்கம் வென்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேரடித் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குழுப் பிரிவு ஆட்டங்களில் இந்திய அணி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று 76 கோல்கள் அடித்து சாதனை புரிந்தது.  ஆனால், ஆசியப் போட்டி ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் மலேசியாவிடம் 6-7 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெறும் கனவு கலைந்தது.

இந்நிலையில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. முதல் காலிறுதியில் இந்திய அணி முதல் கோலை அடித்தது. ஆகாஷ்தீப் அருமையான கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். மூன்றாவது காலிறுதி வரை இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. கடைசி காலிறுதியில் ஆட்டத்தின் போக்கு மாறியது. நான்காவது காலிறுதியில் இந்திய அணி பெனால்டி கார்னர் மூலமாக மற்றொரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. ஹர்மன்ப்ரீத் இந்த கோலை அடித்தார். ஆனால் ஆபத்தான இந்த நிலைமையில் அடுத்த இரு நிமிடங்களில் பாகிஸ்தான் ஒரு கோல் அடித்து 2-1 என ஆட்டத்தைப் பரபரப்பாக்கியது. எனினும் அந்த அணியால் கடைசிவரை மற்றொரு கோல் அடித்து சமன் செய்யமுடியாமல் போனது.

இதையடுத்து, 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com