ஆசியப் போட்டியில் இந்திய ஹாக்கி: தொடரும் வெற்றி, தோல்விகள்!

ஒலிம்பிக் போட்டியில் 8 முறை தங்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கியால், ஆசியப் போட்டியில் மூன்று முறை மட்டுமே சாம்பியன் ஆக...
ஆசியப் போட்டியில் இந்திய ஹாக்கி: தொடரும் வெற்றி, தோல்விகள்!

உலகின் 5-ம் நிலையில் உள்ள இந்திய அணி, மீண்டும் தங்கம் வென்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேரடித் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குழுப் பிரிவு ஆட்டங்களில் இந்திய அணி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று 76 கோல்கள் அடித்து சாதனை புரிந்தது.  ஆனால், ஆசியப் போட்டி ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் மலேசியாவிடம் 6-7 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெறும் கனவு கலைந்தது.

இந்நிலையில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா.  2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

பாகிஸ்தான் 8 முறையும் தென் கொரியா 4 முறையும் ஆடவர் ஹாக்கியில் தங்கங்கள் வென்றுள்ளன. ஒலிம்பிக் போட்டியில் 8 முறை தங்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கியால், ஆசியப் போட்டியில் மூன்று முறை மட்டுமே சாம்பியன் ஆகமுடிந்துள்ளது. 

ஆசியப் போட்டி: இந்திய ஹாக்கி

தங்கம் - 3, வெள்ளி, 9, வெண்கலம் - 3.

1958: வெள்ளி
1962: வெள்ளி
1966: தங்கம்
1970: வெள்ளி
1974: வெள்ளி
1978: வெள்ளி
1982: வெள்ளி
1986: வெண்கலம்
1990: வெள்ளி
1994: வெள்ளி
1998: தங்கம்
2002: வெள்ளி
2006: 5-ம் இடம்
2010: வெண்கலம்
2014: தங்கம்
2018: வெண்கலம்

ஆடவர் ஹாக்கி: ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற நாடுகள்
 
பாகிஸ்தான் (8 தங்கங்கள்): 1958, 1962, 1970, 1974, 1978, 1982, 1990, 2010
தென் கொரியா (4 தங்கங்கள்): 1986, 1994, 2002, 2006
இந்தியா (3 தங்கங்கள்): 1966, 1998, 2014
ஜப்பான் (1 தங்கம்): 2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com