சுடச்சுட

  

  15 வருடங்கள் கழித்து ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் அறிமுகமாகியுள்ள தினேஷ் கார்த்திக்!

  By எழில்  |   Published on : 02nd July 2019 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dk88

   

  6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்று, தோல்வியே அடையாத அணியாக இருந்த இந்தியா, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் அதே மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

  2004-ல் தோனி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய அணி வீரராக அறிமுகமானார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

  மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2007 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வானார் தினேஷ் கார்த்திக். ஆனால் அணியில் விக்கெட் கீப்பராக தோனி இருந்ததால் தினேஷ் கார்த்திக்குக்கு ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 2011, 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் தேர்வாகவில்லை. (இதனிடையே 2007 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் கார்த்திக், 4 ஆட்டங்களில் இடம்பெற்றார்.)

  2019 உலகக் கோப்பைப் போட்டியில் தேர்வான 34 வயது தினேஷ் கார்த்திக், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார். இதன்மூலம் அவர் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai