சுடச்சுட

  

  ஆரஞ்சு வண்ண உடையில் அரசியலைக் கலக்க வேண்டாம்: ஹர்பஜன் சிங் வேண்டுகோள்!

  By எழில்  |   Published on : 02nd July 2019 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chahal817171xx

   

  2019 உலகக் கோப்பையில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் தோல்வியைப் பரிசளித்தது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆரஞ்சு வண்ணத்துடன் கூடிய உடையை அணிந்தது. இதனால் சர்ச்சை எழுந்தது. காவி உடையை இந்திய அணி அணிந்துள்ளதாக விமரிசனங்கள் எழுந்தன. பிறகு ஆட்டத்தில் தோற்ற பிறகு, ஆரஞ்சு வண்ண உடையை அணிந்தததால் தான் ராசியில்லாமல் போய்விட்டது என்றும் ரசிகர்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.

  இதுபோன்ற கருத்துகளுக்கு ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:

  ஆரஞ்சு வண்ண உடையை இந்திய அணி பலமுறை அணிந்துள்ளது. ஆரஞ்சு வண்ணம் கொண்ட உடையுடன் நான் விளையாடியுள்ளேன். 2007 டி20 உலகக் கோப்பையை நாங்கள் வென்றபோது, மென் இன் ஸ்கை ப்ளூ கலர் என்றழைத்தார்கள். அணியினர் எப்போது விளையாடினாலும் அவர்களுக்கு ஆதரவளியுங்கள். அரசியல் காரணங்களைக் கூறவேண்டாம். அரசியலில் இருந்து விளையாட்டை ஒதுக்கி வைப்பது நல்லது. எங்கள் உடை எந்த நிறத்தில் இருக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லவேண்டாம். வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவளியுங்கள். அணியின் உடையில் உள்ள வண்ணத்தால் எப்படி ஓர் அணி போட்டியில் தோற்கும்? ஆரஞ்சு வண்ண உடை அணிந்ததால் தான் இந்திய அணி தோற்றது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? உள்ளுர் அணியுடன் விளையாடும்போது உடையின் வண்ணத்தை மாற்றவேண்டும் என்பது ஐசிசியின் விதிமுறை என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai