மயங்க் அகர்வால் சரியான தேர்வா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

இந்தக் காரணங்களால், விஜய் சங்கருக்குக் காயம் ஏற்பட்டவுடன் மயங்க் அகர்வாலைத் தேர்வு செய்துள்ளது தேர்வுக்குழு...
மயங்க் அகர்வால் சரியான தேர்வா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

கால் பாதத்தில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக இனி வரும் உலகக் கோப்பை ஆட்டங்களில் இருந்து விலகினார் இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். அவருக்கு பதிலாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராயுடு, ரஹானே ஆகியோர் இருக்கும்போது மயங்க் அகர்வால் ஏன் தேர்வானார் என உங்களுக்குக் கேள்வி எழுந்திருக்கும். ஆனால், சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர் 28 வயது மயங்க் அகர்வால். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகி 2 டெஸ்டுகளில் விளையாடி, இரு அரை சதங்கள் எடுத்தார். 

மேலும், லிஸ்ட் ஏ எனப்படும் உள்ளூர் ஒருநாள் ஆட்டங்களில் அபாரமாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் மயங்க் அகர்வால்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட் - மயங்க் அகர்வால்

31 இன்னிங்ஸ் - 1747 ரன்கள், 58.23 சராசரி, 105.75 ஸ்டிரைக் ரேட், 7 சதங்கள், 6 அரை சதங்கள்

இங்கிலாந்தில் - 6 இன்னிங்ஸில் 442 ரன்கள். 88.40 சராசரி, 113.62 ஸ்டிரைக் ரேட், 3 சதங்கள். 

இந்தக் காரணங்களால், விஜய் சங்கருக்குக் காயம் ஏற்பட்டவுடன் மயங்க் அகர்வாலைத் தேர்வு செய்துள்ளது தேர்வுக்குழு. இதையடுத்து இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் மயங்க் அகர்வால் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com