இந்தியா, நியூஸிலாந்து அரையிறுதி ஆட்டம் நாளை தொடங்கும்

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழை குறுக்கீடு காரணமாக நாளைய (புதன்கிழமை) தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழை குறுக்கீடு காரணமாக நாளைய (புதன்கிழமை) தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் திணறிய நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்கத் திணறினர். இதனால், அந்த அணியின் ரன் ரேட் 3.5 ஆகவே இருந்து வந்தது. அதன்பிறகு, 35 ஓவர்களைக் கடந்த பிறகு ஓரளவு துரிதமாக ரன் சேர்க்க அந்த அணியின் ரன் ரேட் ஓவருக்கு 4-ஐ கடந்தது. 

இந்த நிலையில் 46.1 ஓவரில் நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மழை தொடர்ந்து இடைவெளிவிட்டு பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் இன்று நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற முடிவுக்கு நடுவர்கள் வந்தனர். இதனால், இந்த ஆட்டம் நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

எனவே, இந்த அரையிறுதி ஆட்டம் நாளை மீண்டும் இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கவுள்ளது. அப்போது, நியூஸிலாந்து அணி தனது பேட்டிங்கில் மீதமுள்ள 23 பந்துகளை எதிர்கொள்ளும். அதன்முடிவில் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.  

நியூஸிலாந்து பேட்டிங் விவரம்: http://bit.ly/2Lea5t5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com