சுடச்சுட

  

  ஜடேஜாவை பாராட்டிய மஞ்ச்ரேக்கர்: இதற்கு பிறகும் பாராட்டாமல் இருக்க முடியுமா..

  By DIN  |   Published on : 10th July 2019 10:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Jadeja


  உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவரை பாராட்டியுள்ளார்.    

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்களுக்கு இடையே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரவீந்திர ஜடேஜாவின் திறன் குறித்து ஊடகத்தில் மட்டமான ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு ரவீந்திர ஜடேஜாவும் டிவிட்டர் பதிவில் பதிலடி தந்தார். எனினும், இருவருக்கும் இடையிலான இந்த கருத்து மோதல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. 

  இந்த நிலையில், உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா பீல்டிங்கிலும் அசத்தினார். இது போதாததற்கு பேட்டிங்கிலும் கலக்கினார் ஜடேஜா. இந்தியா தோல்வியடைந்துவிட்டது என்று அனைவரும் முடிவுக்கு வந்த நேரத்தில் களமிறங்கிய ஜடேஜா அதிரடியாக விளையாடி இந்திய அணி வசம் இருந்த நெருக்கடி அனைத்தையும் நியூஸிலாந்து பக்கம் திரும்பினார். சிறப்பாக விளையாடிய அவர் 38 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். மொத்தம் 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 77 ரன்கள் எடுத்த அவர் வெற்றிக்கு மிக அருகில் வந்து ஆட்டமிழந்தார். 

  ஆட்டத்தின் போக்கினையே மாற்றிய ஜடேஜாவின் இந்த செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

  இந்த வரிசையில், மஞ்ச்ரேக்கரும் இந்த ஆட்டத்துக்குப் பிறகு ஜடேஜாவை பாராட்டியுள்ளார். "சிறப்பாக விளையாடினாய் ஜடேஜா" என்று மஞ்ச்ரேக்கர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai