இந்தியாவைப் போல் திணறும் ஆஸி.,: 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.  
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.  

எட்ஜ்பாஸ்டன் மைதானம் என்பதால் ரன் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளம் முற்றிலும் மாறாக இருந்தது. ஆர்ச்சரின் முதல் பந்திலேயே ஃபின்ச் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்த விக்கெட் இழப்பு மூலம் ஆஸ்திரேலிய அணி ரிவியுவையும் இழந்தது.

அடுத்த ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்குள் ஹேண்ட்ஸ்கோம்பும் வெறும் 4 ரன்களுக்குள் வோக்ஸ் பந்தில் போல்டானார். இதனால், அந்த அணி 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.  

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி திணறியது போல், 15 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறுகிறது.

சற்று முன் வரை அந்த அணி 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com