சுடச்சுட

  

  உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டிகளை இங்கிலாந்து அணி வென்றாலும் பணியில் நீடிக்க விரும்பாத பயிற்சியாளர்!

  By எழில்  |   Published on : 13th July 2019 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Trevor_Bayliss1

   

  உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டிகளுக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளார் டிரெவோர் பேலிஸ்.

  இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

  நீங்கள் நன்றாகச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நான்கு வருடங்கள் போதுமானது. வீரர்களுக்குப் புதிய குரல் தேவை. அது, அவர்களை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவும். செப்டம்பர் மாதத்துடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிவிடுவேன். 

  2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு 2019 போட்டியை வெல்ல என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டோம். அந்தக் கனவை நிறைவேற்றும் தருணம் இப்போது வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

  2019 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இறுதிச்சுற்றில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai