207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
நன்றி: டிவிட்டர்/கிரிக்கெட் ஆஸ்திரேலியா
நன்றி: டிவிட்டர்/கிரிக்கெட் ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

ஆப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷசாத் மற்றும் ஸஸாய் ரன் ஏதும் எடுக்காமலேயே முறையே ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து, ரஹ்மத் ஷா மற்றும் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பாட்னர்ஷிப்பை கட்டமைத்து விளையாடினர். எனினும், 3-வது விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு 50 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 18 ரன்களுக்கு ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, ரஹ்மத் ஷாவும் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய முகமது நபியும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க அந்த அணி 77 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.  

இதையடுத்து, கேப்டன் நைப் மற்றும் ஸாத்ரான் மீண்டும் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இருவரும் தொடக்கத்தில் சற்று நிதானம் காட்ட, அதன்பிறகு அதிரடியாக ரன் சேர்த்தனர். இதனால், அந்த அணியின் ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது. இதனிடையே, நஜிபுல்லா ஸாத்ரான் 46-வது பந்தில் அரைசதம் அடித்தார். 

ஆப்கானிஸ்தானுக்கு இந்த பாட்னர்ஷிப் சிறப்பாக அமைந்து வந்த நிலையில், கேப்டன் நைப் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அரைசதம் அடித்த ஸாத்ரானும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. இதைத்தொடர்ந்து, தவ்லாத் ஸாத்ரானும் தொடர்ந்து ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 166 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், அந்த அணி 200 ரன்களை எடுப்பதே சிரமமாக இருந்தது. 

ஆனால், அடுத்து களமிறங்கிய ரஷித் கான் மற்றும் முஜீப் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக அடித்தனர். இதனால், அந்த அணி 200 ரன்களை எட்டியது. எனினும், இந்த அதிரடி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 

ரஷித் கான் 11 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, முஜீப்பும் 9 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 13 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், அந்த அணி 38.2 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில், கம்மின்ஸ் மற்றும் ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com