இலங்கை அணித் தேர்வை வெளிப்படையாகக் கிண்டல் அடித்த இங்கிலாந்து கேப்டன்!

உலகக் கோப்பைக்குத் தேர்வாகிற வீரர்கள் இப்படி இருந்தால் எதிரணிகள் கிண்டல் செய்யாமல் என்ன செய்யும்...
இலங்கை அணித் தேர்வை வெளிப்படையாகக் கிண்டல் அடித்த இங்கிலாந்து கேப்டன்!

2015 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் விளையாடாத திமுத் கருணாரத்னே, 2019 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியின் கேப்டனாக உள்ளார். அதேபோல ஜீவன் மெண்டிஸும் 2015 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் விளையாடிவர்தான். நேராக இந்த உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். 

2017 முதல், ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடாத லஹிரு திரிமான்னே, மிலிந்தா சிரிவர்தனா, ஜெஃப்ரீ வேண்டெர்சே ஆகியோரும் இலங்கை அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். 

உலகக் கோப்பைக்குத் தேர்வாகிற வீரர்கள் இப்படி இருந்தால் எதிரணிகள் கிண்டல் செய்யாமல் என்ன செய்யும்? ஆனால் இதை வெளிப்படையாகவே நிகழ்த்திக் காண்பித்துவிட்டார் இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன். 

செய்தியாளர் சந்திப்பில், இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தான் ஆச்சர்யமான தேர்வாக இருக்கப் போகிறார் என நீங்கள் நினைக்கிறீர்களா என்று இயன் மார்கனிடம் கேட்கப்பட்டது.

இதற்கான பதிலில் இலங்கை அணியைக் கிண்டல் அடித்துள்ளார் மார்கன். அவர் கூறியதாவது:

ஆர்ச்சர் ஒன்றும் ஆச்சர்யமான தேர்வு இல்லை. இலங்கை அணியில் பத்து புதிய வீரர்கள் உள்ளார்கள். அப்படித்தானே? நான் அவர்களுடன் விளையாடாத வீரர்கள் சிலரை இலங்கை அணி தேர்வு செய்துள்ளது. நான் பத்து வருடங்களாக விளையாடி வருகிறேன். அதுதான் என்னைப் பொறுத்தவரை ஆச்சர்யமான அணித் தேர்வு என்று பதில் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com