விராட் கோலியின் முதிர்ச்சியற்ற செயல்: தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா விமரிசனம்!

நீங்கள் பதிலடி கொடுத்தால் அவருக்குக் கோபம் வந்துவிடுகிறது. எனக்கு அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை...
விராட் கோலியின் முதிர்ச்சியற்ற செயல்: தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா விமரிசனம்!

கடந்த ஏப்ரல் மாதம், தில்லி - பெங்களூர் இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தின்போது விராட் கோலிக்கும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தில்லி வீரர் ககிசோ ரபாடாவுக்கும் இடையே லேசாக முட்டிக்கொண்டது. 

அப்போது என்ன நடந்தது என்று கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு ரபாடா அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னுடைய பந்தில் விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்துவிட்டு என்னைப் பார்த்து ஏதோ பேசினார். அப்போது நீங்கள் பதிலடி கொடுத்தால் அவருக்குக் கோபம் வந்துவிடுகிறது. எனக்கு அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படிக் கோபப்படுவது நன்றாக விளையாடுவதற்கு உதவுவதால் அதுபோலச் செய்கிறார் போல. ஆனால் எனக்கு அது மிகவும் முதிர்ச்சியற்ற செயலாகத் தெரிகிறது. அவர் அற்புதமான வீரர்.  அதேசமயம் அவரால் ஆடுகளத்தில் விமரிசனக்களை வாங்கிக்கொள்ள முடிவதில்லை. 

பிறகு அன்று மாலை அணியின் பேருந்தில் செல்லும்போது, நான் என்னையே கேட்டுக்கொண்டேன், அவர் ஏன் எப்போதும் ஆடுகளத்தில் கோபமாக இருக்கிறார்? அவர் நிஜமாகவே கோபமாக உள்ளாரா? என்று. என்னை எது கோபப்படுத்தும் என்றும் எண்ணினேன். அது எப்போதாவதுதான் நடக்கும். அப்படிக் கோபப்படுவதுதான் அவரை நன்கு விளையாடவைக்கிறதா? நான் சொல்வது புரிகிறதா? என்னால் அப்படி என்னைக் கோபப்படுத்திக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com