மே.இ. அணி கொடுத்த அழுத்தங்களைச் சமாளித்து அட்டகாசமாக வென்ற ஆஸ்திரேலியா: விடியோ ஹைலைட்ஸ்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா...
மே.இ. அணி கொடுத்த அழுத்தங்களைச் சமாளித்து அட்டகாசமாக வென்ற ஆஸ்திரேலியா: விடியோ ஹைலைட்ஸ்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா. அதன் வெற்றியில் மிட்செல் ஸ்டார்க், நாதன் கோல்டர் நைல் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். 

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரென்ட்பிரிட்ஜில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 49 ஓவர்களில் 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. ஆல்ரவுண்டரான நாதன் நைல் 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 92 ரன்களை விளாசினார். முன்னாள் கேப்டனான ஸ்மித் நிதானமாக ஆடி 73 ரன்களுடன் அரை சதத்தைப் பதிவு செய்தார். உலகக் கோப்பை வரலாற்றில் 8-ம் நிலை பேட்ஸ்மேனாக ஆடி அதிகபட்ச ஸ்கோர் (92) அடித்த சாதனையை நிகழ்த்தினார் நாதன் கோல்டர் நைல். ஆஸ்திரேயாவின் அற்புதமான பந்துவீச்சில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது மே.இ. அணி. ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் அற்புதமாகப் பந்துவீசி 46 ரன்களை மட்டுமே தந்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com