உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட முடியவில்லையே!: வருந்தும் முன்னணி ஆஸி. வேகப்பந்துவீச்சாளர்

உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்க பார்க்க நான் அதை மிகவும் தவறவிடுவதாக உணர்கிறேன்...
உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட முடியவில்லையே!: வருந்தும் முன்னணி ஆஸி. வேகப்பந்துவீச்சாளர்

வெள்ளிக்கிழமை முதல் ஆஸ்திரேலிய ஏ அணி, இங்கிலாந்துக்குச் சென்று ஏழு வாரம் விளையாடவுள்ளது. இந்த அணியில் முன்னணி ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட்டும் இடம்பெற்றுள்ளார்.

பிறகு ஏன் அவர் உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை என்கிற கேள்வி உங்களுக்குத் தோன்றும். 

ஜனவரி மாதம் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து உலகக் கோப்பைப் போட்டிக்கான உடற்தகுதி இல்லையென அவரை தேர்வு செய்யவில்லை கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஆனால் தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் ஹேஸில்வுட், ஆஸ்திரேலிய ஏ அணி சார்பாக உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் அதே இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார்.

தன்னுடைய நிலைமை குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையத்தளத்துக்கு அவர் கூறியதாவது:

நான் இப்போது செய்யும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். இன்று இரவு ஆஸ்திரேலியா விளையாடும் ஆட்டத்தில் சில ஓவர்கள் பார்ப்பேன். உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்க பார்க்க நான் அதை மிகவும் தவறவிடுவதாக உணர்கிறேன். இந்தப் போட்டி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும். இந்தச் சமயத்தில் எனக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அதுதான் மிகவும் கடுப்பேற்றுகிறது. அதேசமயம் தற்போது அந்தப் போட்டி நடைபெறும்போது நான் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன். இது இன்னும் சோதிக்கிறது. இப்போது நல்ல நிலைமையில், புத்துணர்ச்சியுடன் இருப்பதால் ஆஷஸ் போட்டியை எதிர்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார். 

ஆஷஸ் தொடர், ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com