சுடச்சுட

  

  இந்தியா - நியூஸிலாந்து ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது

  By DIN  |   Published on : 13th June 2019 08:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Trent Bridge

  நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்


  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாத நிலையில் கைவிடப்பட்டது. 

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் நாட்டிங்காமில் மோதவிருந்தன. கடந்த இரண்டு நாட்களாகவே நாட்டிங்காமில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தான் இன்றும் நீடித்தது. 

  இதனால், இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. எனினும், மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக, இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. 

  இதன்மூலம், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி 4 ஆட்டங்களில் 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறது. 

  நடப்பு உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக கைவிடப்படும் 4-வது ஆட்டம் இதுவாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai