உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடி அளிக்கும் இங்கிலாந்து பந்துவீச்சு!

இரண்டு சிக்ஸர்கள் அடித்த ரஸ்ஸல், வுட் பந்துவீச்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்...
உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடி அளிக்கும் இங்கிலாந்து பந்துவீச்சு!

முதல்முறையாகப் பட்டம் வெல்லத் துடிக்கும் இங்கிலாந்தும், பாரம்பரியப் பெருமையை மீட்கப் போராடும் மேற்கிந்தியத் தீவுகளும் செளதாம்ப்டன் ரோஸ்பவுலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மோதுகின்றன.

இன்றைய ஆட்டம் மழைப் பாதிப்பு எதுவும் இன்றி சரியான நேரத்தில் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மே.இ. அணியில் ரஸ்ஸல் இடம்பெற்றுள்ளார்.

தொடக்க வீரர் எவின் லூயிஸ் 2 ரன்களில் வோக்ஸின் அற்புதமான பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கிறிஸ் கெயில். பவுண்டரிகளை அவ்வப்போது அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வோக்ஸ் பந்துவீச்சில் இவர் அளித்த கேட்சைத் தவறவிட்டார் வுட். மறுமுனையில் ஷாய் ஹோப் நிதானமாக விளையாடி வர, அதிரடியாக விளையாடிய கெயில், 36 ரன்களில் பிளெங்கெட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஷாய் ஹோப் 30 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வுட் பந்துவீச்சில் வெளியேறினார். 

இதன்பிறகு ஜோடி சேர்ந்த பூராணும் ஹெட்மையரும் பந்துகளை வீணடிக்காமல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 89 ரன்கள் சேர்த்த இவர்களைப் பிரித்தார் ஜோ ரூட். ஹெட்மையர் 39 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. ரூட் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்த ஹோல்டர் அடுத்தப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு இரண்டு சிக்ஸர்கள் அடித்த ரஸ்ஸல், வுட் பந்துவீச்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. பூராண் 63, பிராத்வெயிட் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com