பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பும் பின்பும்: ‘தூங்காத’ நினைவுகளுடன் ஹர்பஜன் சிங்!

எவ்வளவு முயன்றும் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒருவேளை இந்திய அணி தோற்றுவிட்டால் என்ன நடக்கும்...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பும் பின்பும்: ‘தூங்காத’ நினைவுகளுடன் ஹர்பஜன் சிங்!

2011 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மொஹலியில் நடைபெற்ற அந்த ஆட்டம் குறித்து ஒரு பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

அந்த ஆட்டம் குறித்த என் நினைவு என்னவென்றால், அன்றைய தினத்துக்கு முந்தைய இரவில் எவ்வளவு முயன்றும் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒருவேளை இந்திய அணி தோற்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். ரசிகர்கள் கோபப்படுவார்கள். பிறகு என்னவேண்டுமானாலும் நடக்கும். 2003 உலகக் கோப்பைப் போட்டியில் நாங்கள் ஒரு ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை. உடனே, மக்கள் கோபமடைந்து எங்கள் உருவபொம்மைகளை எரித்தார்கள். வீட்டின் மீது கல்லெறிந்தார்கள். மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். 

அந்த ஆட்டத்தை நாங்கள் வென்றபிறகு மகிழ்ச்சி காரணமாக அடுத்த நாளும் என்னால் தூங்கமுடியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்பது இப்படித்தான் இருக்கும். இங்கிலாந்து அல்லது நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை விடவும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கும். இரு நாட்டு மக்களும் தங்கள் நாடு வெல்லவேண்டும் என்றே எண்ணுவார்கள். நீங்கள் தோற்றுவிட்டால் மக்கள் ஏமாற்றமடைவார்கள், நிதானத்தை இழப்பார்கள். உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி தொடர்ந்து ஜெயித்து வருவதால் இந்திய அணி வீரர்களுக்குக் கூடுதல் அழுத்தம் இருக்கும் என்று கூறியுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மான்செஸ்டரில் நாளை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com