மே.இ. அணி அதிரடி ஆட்டம்: ஹோப், ஹெட்மையர் அபார பேட்டிங்!

25 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ஹெட்மையர். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில்...
மே.இ. அணி அதிரடி ஆட்டம்: ஹோப், ஹெட்மையர் அபார பேட்டிங்!

மேற்கிந்தியத் தீவுகள் - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் டெளடானில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மாஷ்ரஃப் மொர்டஸா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். புள்ளிகள் பட்டியலில் மே.இ. அணி 6-வது இடத்திலும் வங்கதேச அணி 8-வது இடத்திலும் உள்ளன. 

3 ஓவர்கள் வரை ரன் எதுவும் எடுக்க முடியாமல் திணறினார் கிறிஸ் கெயில். பிறகு 13 பந்துகள் வரை எதிர்கொண்டும் ஒரு ரன்னும் எடுக்க முடியாமல் சைஃபுதீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் 5 ஓவர்கள் வரை மே.இ. அணிக்கு 8 ரன்கள் மட்டுமே கிடைத்தன. இதன்பிறகு லூயிஸும் ஷாய் ஹோப்பும் நன்கு விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள். 20-வது ஓவரின் முடிவில் 86 ரன்கள் கிடைத்தன. 58 பந்துகளில் அரை சதமெடுத்த லூயிஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 67 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு வந்த பூராண், விரைவாக ரன்கள் சேர்த்தார். எனினும் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மே.இ. அணிக்கு இழப்பு எதுவும் நேராதபடி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார் ஹெட்மையர். சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து மே.இ. ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சிறிய அளவிலான மைதானத்தை அவர் நன்குப் பயன்படுத்திக்கொண்டார். 

25 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ஹெட்மையர். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களையும் அவர் பூர்த்தி செய்தார். எனினும் சரியாக 50 ரன்களுடன் ஆட்டமிழந்தார் ஹெட்மையர். அடுத்து வந்த ரஸ்ஸல் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஷாய் ஹோப் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com