டாஸ் வென்றால் பேட்டிங் எடு: இம்ரான் கானின் ஆலோசனையை நிராகரித்த பாகிஸ்தான் கேப்டன்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது...
டாஸ் வென்றால் பேட்டிங் எடு: இம்ரான் கானின் ஆலோசனையை நிராகரித்த பாகிஸ்தான் கேப்டன்!

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸுக்கு சில ஆலோசனைகளைக் கூறினார்.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் அழுத்தம் அதிகமாக இருக்கும். வலுவான மனநிலை இந்த ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்யும். சர்ஃபராஸ் போன்ற ஒரு துணிச்சலான கேப்டனை நாம் கொண்டுள்ளோம். அவர் தன் திறமையை நன்கு வெளிப்படுத்த வேண்டும். தோற்றுவிடுவோம் என நினைக்கவேண்டாம். அப்படி நினைத்தால் அது எதிர்மறை உணர்வுகளையும் தடுப்பாட்டத் திட்டங்களையும் ஊக்குவிக்கும். பாகிஸ்தான் அணிக்கும் சர்ஃபராஸுக்கும் என்னுடைய சில ஆலோசனைகள்: முதன்மையான பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களுடன் சர்ஃபராஸ் களமிறங்கவேண்டும். ஆடுகளத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தாலொழிய, டாஸை ஜெயிக்கும் சர்ஃபராஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்யவேண்டும். இந்த ஆட்டத்தில் வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் தோல்வி பயத்தை முற்றிலுமாக அகற்றிவிடுங்கள். கடைசிப் பந்து வரை போராடவேண்டும். பிறகு நல்ல விளையாட்டு வீரனாக முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாட்டு மக்களின் பிரார்த்தனைகள் உங்களுக்காக உண்டு என்று கூறினார்.

ஆனால் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. இதுவே பாகிஸ்தான் அணி தோல்வியடைய முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. 

பாகிஸ்தான் பிரதமர் வழங்கிய ஆலோசனையைப் புறக்கணித்த சர்ஃபராஸைச் சமூகவலைத்தளங்களில் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com