150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி: முதலிடத்துக்கு முன்னேறியது இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 397 ரன்கள் குவித்தது. 

இங்கிலாந்து பேட்டிங்: http://bit.ly/2ZuwqFX

398 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நூர் அலி ஸத்ரான் ரன் ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் வேகத்தில் போல்டானார். அவருடன் களமிறங்கிய கேப்டன் குல்பதின் நயிப் அதிரடியாக ரன் குவித்தார். ஆனால், அவர் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, ஆப்கான் பேட்ஸ்மேன்கள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர் வரை தாக்குப்பிடிக்கும் நோக்கத்தில் விளையாடினர். பொறுமையாக விளையாடி வந்த ரஹ்மத் ஷா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்கார் ஆப்கன் மட்டும் சற்று துரிதமாக ரன் குவித்தார். இவரும் 48 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்த அணியில் நிதான விளையாடி அரைசதம் அடித்த ஒரே வீரர் ஹஷ்மதுல்லா ஷாகிதி தான். அவரும் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர் விக்கெட்டுகள் விழுந்த போதிலும் அந்த அணி 50 ஓவர் வரை முழுமையாக பேட்டிங் செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

சாதனைகள்: http://bit.ly/2ZxhWFu

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com