உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 398 ரன்கள் குவித்துள்ளது.
இதற்கு மிக முக்கியமான காரணம் இங்கிலாந்து கேப்டன் மார்கனின் அதிரடி தான் காரணம். இவர் 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்து அசத்தினார். அதில், 17 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப்-5 வீரர்கள் பட்டியல்:
உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த டாப்-5 வீரர்கள் பட்டியல்:
உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் அதிகபட்ச ரன்கள்:
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 200 சிக்ஸர்கள்:
இந்த ஆட்டத்தில் மார்கன் 17 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் 200 சிக்ஸர்களை கடக்கும் 8-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேசமயம், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டி வில்லியர்ஸ் மற்றும் மெக்கலத்தை பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்:
வீரர் | ஓவர்கள் | ரன்கள்/விக்கெட்டுகள் |
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) | 9 ஓவர்கள் | 110/0 |
மார்டின் ஸ்நைடன் (நியூஸிலாந்து) | 12 ஓவர்கள் | 105/2 |
ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்தியத் தீவுகள்) | 10 ஓவர்கள் | 104/1 |
தவ்லாத் ஸாத்ரான் (ஆப்கானிஸ்தான்) | 10 ஓவர்கள் | 101/2 |
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த சுழற்பந்துவீச்சாளர்: