ரோஹித் சர்மாவுடன் தன்னை ஒப்பிட்ட ஐசிசிக்கு சச்சின் பதில்!
By எழில் | Published On : 18th June 2019 02:27 PM | Last Updated : 18th June 2019 03:10 PM | அ+அ அ- |

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
இந்த ஆட்டத்தின்போது, பாயிண்ட் பகுதியில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்தார். இதை 2003 பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது அக்தர் பந்துவீச்சில் பாயிண்ட் பகுதியில் சச்சின் அடித்த சிக்ஸருடன் ஒப்பிட்டு யார் நன்றாகச் செய்தார் என்று கேள்வி கேட்டது ஐசிசி, ட்விட்டர் வழியாக.
இதற்கு சச்சின் பதிலளித்துள்ளார். நாங்கள் இருவருமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதில், மும்பையைச் சேர்ந்தவர்களும் கூட. எனவே, தலை என்றால் நான் வெற்றி, பூ என்றால் உங்களுக்குத் தோல்வி என்று கூறியுள்ளார்.
Sachin in 2003 or Rohit in 2019 – who did it better? pic.twitter.com/M9k8z5lLQd
— ICC (@ICC) June 16, 2019